தற்போதைய நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து அதிக உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாகவும், தற்போதைய நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து அதிக உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கு கடன் வசதியை பெற்றுத் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருடன் அமைச்சர் கஞ்சன விஜயசேகர நாளைய தினம் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஒன்லைன் முறையில் இடம்பெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் பங்கேற்கவுள்ளார்.