ரஷ்யாவின் எண்ணெய், மற்றும் ஏனைய எரிபொருட்களின் இறக்குமதிகளுக்கான தடையொன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மார்ச் 8 ம் திகதியன்று அறிவித்திருந்தார்.
உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் இந்த அறிவிப்பை விடுத்திருந்தத்துடன், இந்தத் தடையின் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதை பைடன் ஏற்றுக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவானது தனக்குத்தேவையான திரவ எரிபொருளில் எட்டு (8%) வீதத்தினை ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்துகொள்கிறது. இந்த நிலையில், மசகு எண்ணெயின் விலை தற்போது பரலொன்றிற்கு $130 ஆக உலக சந்தையில் உயர்ந்திருக்கிறது.
இதேவேளை, ஜனாதிபதி பைடனின் இந்த அறிவித்தலுக்கு முன்னர், இவ்வாண்டு இறுதியுடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய்த் தயாரிப்பு இறக்குமதிகளை தாமும் நிறுத்தப்போவதாக பிரித்தானியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.