ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்திய ஐபிஎம்

அமெரிக்காவை சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை  முடித்துக் கொள்வதாக  ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்

Spread the love