ரஷ்ய சந்தையை இலக்காகக் கொண்ட இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவைப் பேணுவது அவசியமாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் பிரதியமைச்சர் அலெக்ஸி வி.குஸ்தேவிடம் வலியுறுத்தினார்.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் அலெக்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பில் உள்ள வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே வர்த்தகத்துறை அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ரஷ்யாவின் சந்தையில் முன்னுரிமை வழங்க வேண்டும், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்துமாறும் ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதியமைச்சரிடம் பந்துல மேலும் வலியுறுத்தினார்.