எரிபொருள் கொள்வனவுக்கு டொலருக்குப் பதிலாக ரூபிள் – ரஸ்யா

ரஸ்யாவிடம் கொள்வனவு செய்யும் எரிபொருளுக்கான பணத்தினை டொலருக்குப் பதிலாக ரூபிளில் செலுத்துமாறு ரஸ்யா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் தற்போதைய உக்கிரைன் மீதான படையெடுப்பை மிக்க கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் அல்லாத நாடுகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளும் போது அதற்கான கட்டணத்தை டொலருக்கு பதிலாக ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் கடுமையான நிபந்தனை விதித்துள்ளார்.

ஏனைய நாணய பரிமாற்றங்களிலிருந்து ரூபிளையும் தனித்துவமான நாணயமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை கண்டறியுமாறு ரஷ்யாவின் மத்திய வங்கிக்கு புட்டின் பணிப்புரை வழங்கியுள்ளார். நாணய பரிமாற்றங்களில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் நடைமுறையிலுள்ளது போன்றே எரிவாயு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்ய போரின் தாக்கம் காரணமாக மேற்கத்திய நாடுகள் பலவும் சேர்ந்து ரஷ்ய சொத்துக்களை முடக்கியதன் காரணமாக டொலர் மீதான நம்பிக்கையை நிர்மூலமாக்கியதாக அவர் குறை கூறினார்.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை அமுல்படுத்தியுள்ளது யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக ரஷ்ய நாணயமான ரூபிளின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

Spread the love