ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னினியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் கார்லோஸ் அல்கராஸ்(Carlos Alcaraz).

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரர் கார் லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர்டியகோ ஸ்கெவெர்ட்ஸ் மேனுடன் மோதினார். இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
