உலகக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அசத்தலாக துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் ரி-20 போட்டிகளில் அவர் தனது 9 ஆவது அரைச் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இவர் 34 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இவ்வாறு அரைச் சதம் கடந்தார். தொடர்ந்தும் அதிரடி காட்டிய அவர் 44 பந்துகளுக்கு முகம் கொடுத்து 5 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 79 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.