எரிவாயுத் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் – லிட்ரோ

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பொன்றினை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது கெரவலப்பிட்டிய எரிவாயு முனையத்தில் போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம் , குறிகிய காலப்பகுதிக்கு எரிவாயு தட்டுப்பாட்டினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடானது குறுகிய காலத்துக்குள் நிவர்த்தி செய்யப்பட்டு மிக விரைவில் எளிதாக எரிவாயுவை கொள்வனவு செய்யும் நிலை ஏற்படும் எனவும் குறித்த நிறுவனம் தனது நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

Spread the love