பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்துக்கு 45 நாள்களில் செல்லக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பமொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ‘லேசர்வெப்ப உந்துவிசை’ தொழில் நுட்பத்தின் மூலம் இதனை சாத்தியமாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
ஹைட்ரஜன் எரிபொருளை சூடாக்க லேசர்களைப் பயன்படுத்தி புதிய ‘லேசர்-தெர்மல்’ உந்துவிசை அமைப்பை உருவாக்கியுள்ளதாக கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள McGill பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் கூறுகிறார்கள். லேசர்வெப்ப உந்துவிசை என அழைக்கப்படுகிறது, இது விண்கலத்தில் இருக்கும் ஒளிமின்னழுத்த பேனல்களை இயக்குவதற்கு பூமியிலிருந்து வெளிவிடப்படும் மகத்தான லேசர் கற்றைகளை பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைவரப்படி ஒருவர் செவ்வாய்க்கிரகத்தை அடைய சுமார் 500 நாள்கள் ஆகும் என்று நாஸா கணித்துள்ள நிலையில் ஆறு வாரங்களில் செவ்வாய்க் கிரகத்தை அடைவது என்பது, அணுசக்தியால் இயங்கும் ரொக்கெட்டுகளால் மட்டுமே முடியும் என்று முன்பு கருதப்பட்டது. எனினும் தற்போதைய தொழில்நுட்பம் செவ்வாய்க்கான பயண நேரத்தை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்தனர்.