வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவி சோதனை மேற்கொண்டதை ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார். இதனிடையே, வடகொரியா மேலும் எதிர்விளைவு நடவடிக்கைகளை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று துணை ஐ.நா. செய்தித்தொடர்பாளர் அறிக்கையில் வலியறுத்தியுள்ளார்.
வட கொரியா மிக நீண்ட தூர ஏவுகணை சோதனை மேற்கொண்டது. 2018 இல் அந் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடையை மீறுவதாகும் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயலாகும். சர்வதேச விமானம் அல்லது கடல்சார் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு பரிசீலனையும் வட கொரியா மீண்டும் புறக்கணித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என துணை ஐ.நா. செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
.