மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வடமாகாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்று (22) கையளித்துள்ளனர்.
அவர்கள் வடமாகாணத்திற்கு விஜயம் செய்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் நடத்தப்படும் வீதிச் சோதனைச் சாவடிகள் மற்றும் நிறுவப்பட்ட வீதித் தடைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடத்தல் தொடர்பிலும் கண்காணிப்பு விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் மற்றும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி ரோஹினி மாரசிங்க உள்ளிட்டோர் 3 நாட்கள் ஆங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.