அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 100,000 ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாடு இயங்க முடியாது எனவும், அதற்கான வழியை வழங்குபவர்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வருமான வரிக் கொள்கைகளுக்கு, நாட்டின் பொருளாதார நெருக்கடி தணிந்த பிறகு, நெகிழ்வான கொள்கை பின்பற்றப்படும் என்றும், அதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறினார்.