வலை உற்பத்தி விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

வடகடல் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (11/01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரித்தல் மற்றும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்தல் போன்றவை இங்கு கலந்துரையாடப்பட்டன.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் விடயம்சார் தரப்பினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Spread the love