விண்வெளியில், வானொலி அலைகளை வெளியிடும் மர்மப் பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இதனைக் கண்டுபிடித்தனர். அது குறித்து இயற்கை எனும் சஞ்சிகையில் தகவல் வெளியிடப்பட்டது.
சூரிய மண்டலம் இருக்கும் நட்சத்திரங்கள் நிறைந்த மண்டலத்தில், இந்தப் பொருள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மர்மப் பொருளானது. 18 நிமிடங்களுக்கு ஒருமுறை, வானொலி அலைகளை வெளியிடுவதாகவும், ஒவ்வொரு முறையும் வெளிவரும் அலைகள் 1 நிமிடம் வரை நீடிப்பதாகவும் கூறப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த பொருளானது. 3 மாத காலமாக அலைகளை வெளியிட்டபோது முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இது புது விதமான விண்வெளிப் பொருளாக இருக்கலாமென்று, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், குறித்த பொருளுக்கும், வேற்றுலக மனிதர்களுக்கும், பூமிக்கும் தொடர்பில்லையென உறுதிசெய்யப்பட்டது.