ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த ஒரு வருடத்துக்குள் விமானங்களை 11 ஆகக் குறைக்கத் தீர்மானித்துள்ளது என்று விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான 24 விமானங்களில் 8 விமானங்களின் பயணிக்கும் கால எல்லை அடுத்த ஆண்டு காலாவதியாகும். தற்போதைய தினசரி அட்டவணையை பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.