வீதி மின் விளக்குகள் அனைத்தையும் அணையுங்கள்

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி காரணமாக பிரதான வீதிகளிலுள்ள இரவு நேர மின் விளக்குகளை அணைக்குமாறு நிதி அமைச்சார் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் கோரியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் அனைத்து வீதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் அந்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடு முழுவும் கட்டம் கட்டமாக பல்வேறு பிரிவுகளில் ஏழரைமணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே நிதிமைச்சர் அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவித்துள்ளார்.

Spread the love