முல்லைத்தீவு சாலைக்கடற்கரை பகுதியில் இருந்து வெடிபொருள்கள் நிரப்பட்ட படகு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் படகு, இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட படகை வெட்டிச் சோதனையிட்டபோது, படகில் வெடிபொருள்கள் நிரப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.