யாழில் வெதுப்பகங்கள் மூடப்படும் அபாயம் – உரிமையாளர்கள் சங்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நல்லநிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் வெதுப்பகங்களை மூடிவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண வெதுப்பக உற்பத்திப்பொருட்கள்கள் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நேற்று 6ம்திகதி வெதுப்பாக உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் யாழ் நகரில் நடத்திய உடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்படி வெதுப்பகங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர். வடபிராந்தியத்துக்கான பிறீமா மா உற்பத்தி ஆலையிலிருந்து கோதுமை மாவினைப் பெற்று விற்பனைசெய்யும் மொத்த விற்பனை முகவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

விற்பனை முகவர்களினால் வடபிராந்திய வெதுப்பக உற்பத்திப்பொருட்களின் விநியோகத்துக்காக மாதாந்தம் கொடுக்கப்படும் கோதுமை மாவின் அளவானது எதிர்காலத்தில் குறைவாகவே கொடுக்கப்படவிருப்பதாகக கூறிய விற்பனை முகவர்களினது அறிவித்தலை மையமாக வைத்தே தாம் இததகைய முடிவை எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்குத்தள்ளப்படவடிருப்பதாக வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார்.

தமக்கான கோதுமை மாவின் விநியோகம் குறைக்கப்படுவதாக அறிவித்த போதிலும் தாம் அதை ஏற்காது குறைக்கவேண்டாம் என எமது கோரிக்கை முன்வைத்தோம் ஆனாலும் எம் முயற்சி மறுதலிக்கப்பட்டது. அவர்கள் சார்பிலிருந்து எதிர்வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ள மாவின் அளவில் வீழ்ச்சி காணப்படும் எனத்தெரிவித்திருந்தனர்.

இனி வரும் காலங்களில், வெதுப்பக உற்பத்திப்பொருட்களின் உற்பத்தியின் அளவைக் கணிசமானளவு குறைக்கவே உத்தேசித்துள்ளோம். அத்தோடு நாம் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் எம் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலையுமே நாம் பின்பற்றுகிறோம். எனவே எமது முடிவுகளை அவர்களுக்கும் நாம் அறியத்தந்துகொண்டேயுள்ளோம் . இதன் முற்கட்டமாக பொருட்களின் உற்பத்தி குறைவடையும். ஆனாலும் எமது கோரிக்கைகள் நிறைவுறும், பட்சத்தில் உற்பத்திகள் வழமை போல் தொடரும். இல்லாதுபோனால், வெதுப்பகங்கள் படிப்படியாக மூடப்படும். மூடப்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக யாழ் அரச அதிபர் கூட்டுறவு ஆணையாளரூடாக பிறிமா நிறுவனத்துக்கு எங்கள் கோரிக்கைகளை முன்மொழியுமாறு குறிப்புரை வழங்கியுள்ளோம்.

கடந்த தசாபதங்களில் யுத்தகாலங்களில் கூட மக்களின் தேவை கருதி தங்கு தடையின்றி உற்பத்தி செய்தவர்கள் நாங்கள்.  ஆகவே இன்றைய துர்ப்பாக்கிய நிலை விரைவில் மாற்றத்துக்குட்பட வேண்டும் என்றும் இல்லாது போனால் சுமூகமான உற்பத்தியை சமூகத்துக்கு கொடுக்கமுடியாது போகும் என அவர் குறிப்பிட்டார்.

.

Spread the love