வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 8 கைதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்படவுள்ளது.
வழக்கின் தீர்ப்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம்திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்றுவரை பிற்போட கொழும்பு விசேட நீதிமன்றத்தின் நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோரடங்கிய நீதிபதி குழு அன்றைய தினத்தில் தீர்மானித்திருந்தது.