இலங்கைக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் அன்னியச்செலாவணியினை நாட்டுக்குள் கொண்டு வரும் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளிகளுக்கு ஊக்குவிப்புக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
எம் இலங்கை நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறுகின்ற முக்கிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை கூறலாம். அதன்மூலம் வருடத்துக்கு 7 தொடங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்குள் நேர்மையான வழியில் கொண்டு வரப்படுகின்றன.
அவ்விதமாக அன்னியச்செலாவணியை ஈட்டித்தரும் புலம்பெயர் தொழிலார்களை பாராட்டுதல் அவர்கள் உறவுகளைக் கெளரவித்தல் உறவுகளின் நலனில் அக்கறைப்படுதல் ,ஊக்குவித்தல், அவர்களால் தற்போது வரவிருக்கும் பண்டிகைக்காலத்தில் அனுப்பப்படும் பணத்துக்கு அதாவது ஒரு அமெரிக்க டொலருக்குதற்போது செலுத்தப்பட்டு வரும் 10/- வினை ஊக்குவிப்புத்தொகையாக 38/- ஆக வழங்கத்தீர்மானித்துள்ளது. இந்த முன்மொழிவை தொழிலமைச்சு அமைச்சரவையில் முன்வைத்தது இதற்கு அமைச்சரவையும் தனது அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.