நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிநாட்டவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நீண்டகால நுழைவிசைவுத் திட்டமான ‘கோல்டன் பரடைஸ்’ திட்டம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றுக்கு வசதியாக இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.