வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும்.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 3 லட்சத்து 703 ஆகும். 2016ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குறித்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 711 ஆக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love