தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட்டில் ஸ்டார்லிங் செயற்கைகோள் 2ஆவது தொகுதியை விண்ணில் செலுத்தியது. புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 53 ஸ்டார்லிங் செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது.
ராக்கெட்டின் பூஸ்டர் நேற்று அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் குறிக்கப்பட்ட இடத்தில் வந்திறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறு சுழற்சி முறையில் பால்கன் 9 ராக்கெட்டின் பூஸ்டரை 111 ஆவது முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்துகிறது.
https://mobile.twitter.com/SpaceIntellige3/status/1525265412275032065
