ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்சை விரைவில் தனியார் மயப்படுத்த பிரதமர் முன்மொழிவு

இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த முன்மொழிவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்; 2020-2021 இல் மட்டும் விமானசேவை 45 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது. 2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நஷ்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நஷ்டத்தை நாமே ஏற்கநேரிடும். இந்த நஷ்டத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் – என்றார்.

Spread the love