மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
தினியாவில பாலித தேரர் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அஜித் நிவார்ட் கப்ரால் நீதிமன்றத்தில் இன்று கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் எனக் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.