ரஷ்யா-உக்ரேய்ன் இடையில் போர்ப்பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது, பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும். கிழக்கு உக்ரேய்னில் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேய்ன் மீதான போருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று அதிகாலை உத்தரவிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.