11 டைனோசர்களின் எலும்பு கூடுகள் இத்தாலியில் கண்டுபிடிப்பு !

இதுவரை மனிதன் கண்டிராத உலகின் மிக பெரிய விலங்கு இனங்களை பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் திகைப்பூட்ட செய்கின்றன. அந்த வகையில் டைனோசர்கள் பற்றிய ஆய்வுகள் மனிதர்களுக்கு எப்போதும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. முதன்முதலில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பெரிய எலும்பை வைத்து சாதாரண மனிதர்களை விட பெரிய உடல் அமைப்பை கொண்ட மனித இனம் முன்னொரு காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கூறினர்.
அதன்பின் அந்த எலும்பு கிடைத்த அதே இடத்தில் பல்லி போன்ற உடல் அமைப்பை கொண்ட விலங்கின் பெரிய தலையை கண்டறிந்தனர். அப்போது தான் அது மனித எலும்பு கிடையாது, வேறொரு புதிய விலங்கு இனத்தின் எலும்பு கூடுகள் என்று வரையறுத்தனர். பிறகு அந்த விலங்கினத்திற்கு ‘டைனோசர்’ என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டனர். இன்று வரை டைனோசர்கள் பற்றிய அறிவியல் பூர்வமான பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறன.
இந்நிலையில் 11 டைனோசர்களின் முழுமை பெற்ற எலும்பு கூடுகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் இத்தாலியில் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழ்வாய்வு செய்த ஆய்வார்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை இது தருவதாக தெரிவித்துள்ளனர். அதுவும் ஒரே இடத்தில் 11 டைனோசர்களின் முழு எலும்பு கூடுகளை கண்டுபிடித்தது தான் இதில் வியப்பூட்டும் விஷயம். இத்தாலியில் ட்ரைஸ்டே நகருக்கு அருகில் உள்ள மீனவர் கிராமத்தில் இந்த எலும்பு கூடுகளை கண்டறிந்துள்ளனர்.

இவற்றை ஆய்வு செய்து பார்த்த போது இந்த டைனோசர்கள் சுமார் 80 மில்லயன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். போலோக்னா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், அந்த இடத்தில் முதன்முதலில் டெதிஷாட்ரோஸ் டைனோசர் எலும்புக்கூடை கண்டுபிடித்தனர். இது ஒரு குள்ள வகை டைனோசர் இனத்தைச் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு 5-6 வயது இருக்க கூடும் என்று தெரிவித்திருந்தனர்.
2009 ஆம் ஆண்டில் இத்தாலிய பழங்காலவியல் நிபுணர் ஃபேபியோ மார்கோ டல்லா வெச்சியாவால் இந்த இனம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அது வரை குறைந்த உயரம் உடைய டைனோசர்கள் தான் இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் நினைத்து கொண்டிருந்தனர். இந்த குள்ள வகை டைனோசர்களுக்கு ‘அன்டோனியோ’ என்று அறிவியல் பூர்வமாக பெயர் வைத்துள்ளனர்.
அதன் பிறகு இதை விடவும் உயரமான டைனோசர்களின் எலும்பு கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு ‘ப்ருனோ’ என்று பெயர் வைத்தனர். தற்போது கிடைத்துள்ள டைனோசர்களின் எலும்புகளின் மூலம் டெதிஷாட்ரோஸ் டைனோசர்கள் பற்றிய ஆய்வுகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதனால் அவற்றை பற்றிய வேறு சில அறிவியல் பூர்வமான தகவல்களை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

Spread the love

2 Comments

  1. Everything is very open with a clear clarification of the issues.
    It was definitely informative. Your site is very helpful.
    Many thanks for sharing!

  2. I’m not sure why but this weblog is loading incredibly slow for me.
    Is anyone else having this issue or is it a issue on my end?

    I’ll check back later on and see if the problem still exists.

Comments are closed.