11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த மேலும் 11 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தபோது கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் , நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இருவரின் கைகளில் காயங்கள் காணப்பட்டதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சையை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார். படகிலிருந்த இழுவை மடி வலைகளை அறுப்பதற்கு முயற்சித்த போது, தங்கூசி நூல் காரணமாக கைகளில் காயம் ஏற்பட்டதை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார். இந்த மீனவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

source from newsfirst

https://ahalnews.com/wp-admin/post.php?post=4697&action=edit

Spread the love