13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையிலுள்ளது. அதன் அச்சுறுத்தல் நிலைமை அனைவருக்கும் தெரியும். எனவே, பெயரளவிலான ஜனாதிபதி முறைமை உருவானால் அது பாதகமாக அமையக்கூடும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கப்படவேண்டும் இவ்வாறு இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.
கண்டி, தலதாமாளிகைக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வழி பாடுகளின் பின்னர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் சங்க சபையினருடன் அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இதன்போது அஸ்கிரிய பீடத்தின் சார்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இதன்போது அஸ்கிரிய பீடத்தினரால் நீதி அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 21ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பிலுள்ள சந்தேகங்கள் பற்றியும் தேரர்கள், நீதி அமைச்சரிடம் விளக்கம் கோரி அதற்குரிய பதில்களைப் பெற்றுக்கொண்டனர்.