13 ஐ முற்றாக ஒழிக்கவும்; பிக்குகள் போராட்டம்

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை மகாசங்கத்தினரால் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்ட போது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றமும் முறுகல் நிலையும் ஏற்பட்டதுடன் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க அரசுக்கு ஒருவாரகா அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகா சங்கத்தினரால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரதி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இனியொருபோதும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த
முடியாதென்ற கோஷத்துடன் பொலிஸார் மற்றும் ஊடகங்களுக்கு முன்பாகவே அரசியலமைப்பின் பிரதி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மூன்று பீடங்களின்பிக்கு ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட பேரணிக்கு முன்பாக சங்க மாநாடும் இடம் பெற்றிருந்தது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகா சங்கத்தினர். கோட்டை பரகும்பா பிரிவெனாவிற்கு அருகாமையில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித் திருந்தனர்.இதில் நூற்றுக்கும். மேற்பட்ட பிக்குகள் கலந்து கொண்டனர்.பேரணியை பொலிஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போதும், பிக்குகள் பொலிஸாருடன் முரண்பட்டவாறு முன்நோக்கிச் சென்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிக்குகள் தியத்த உயன வைக் கடந்து பொல்துவ சந்தியை அடைந்தனர்.

பின்னர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட பிக் குகளை பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்திருந்தனர். எனினும் பொலிஸாரின் தடுப்புக்களை மீறி பிக்குகள் பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பரப ரப்பான நிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் நகலும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. பொலிஸாருக்கும் பிக்குமா ருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பிக்குமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

13ஆவது திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிக்குமார் அரசாங்கத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர். ஒரு வாரத்திற்குள் தமக்கு இதற்கான பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு தமக்கு ஒரு வாரத் திற்குள் தீர்வு கிடைக்காவிடின் ஆயிரக்கணக்கான பிக்குமாரை ஒன்றிணைத்து மிகிந்தலை யில் இருந்து பாரிய போராட்ட மொன்றை ஆரம்பிக்கவுள்ளதா கவும் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love