பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கெஸ்பர் ரூடை 2 நேர் செட்களில் மிக இலகுவாக வெற்றிகொண்ட ரபேல் நடால் 14 ஆவது தடவையாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இதன் மூலம் களிமண்தரை மன்னன் என்பதை ஸ்பானிய வீரர் நடால் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வெற்றியுடன் மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் (கிராண்ட் ஸ்லாம் ) 22 ஆவது சம்பியன் பட்டத்தை நடால் தனதாக்கிக்கொண்டார்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் நடால் கடந்த 13 தடவைகள் சம்பியனானபோது இறுதி ஆட்டங்களில் எவ்வாறு இலகுவாக வெற்றிபெற்றாரோ அதேபோன்று ஞாயிறன்றும் இலகுவாக தனது எதிராளியை வெற்றிகொண்டார். 2 மணித்தியாலங்கள், 18 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் நோர்வே வீரர் கெஸ்பர் ரூடை 6-3, 63,6 – 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் 36 வயதான நடால் வெற்றி கொண்டு சம்பியனானார்.