175,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் முதல் தொகுதியாக விநியோகம்- விவசாய அமைச்சு

மூன்று மாவட்டங்களுக்கு தேவையான 175,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் முதல் தொகுதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்போகத்தில் சோளச் செய்கைக்காக இந்த உரத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான யூரியா விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய கொமர்ஷல் உர நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ, எத்திமலே மற்றும் தம்பகல்ல பிரதேசங்களில் சோளச் செய்கைக்கு 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரமும் குருணாகல் மாவட்டத்தின் எஹதுவெவ பிரதேசத்திற்கு 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரமும் அனுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை மற்றும் கலென்கபிந்துவெவ பிரதேசங்களுக்கு 75,000  மெட்ரிக் தொன் யூரியா உரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

Spread the love