“உலகின் முன்னணி வலைத்தளமான பேஸ்புக்கின் தினசரி பயநர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறுகையில், பேஸ்புக்கின் தினசரி பயநர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.
இதற்கு டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர். தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைத்தளங்களுடனான போட்டியைக் குறைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.