அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஜூன் 5 ஆம் திகதி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசுகையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தாா்.
இந்நிலையில், 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடா்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.
நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை
டென்மாா்க் 1
பிரிட்டன் 2
பின்லாந்து 3
மால்டா 4
ஸ்வீடன் 5
லக்ஸம்பா்க் 6
ஸ்லோவேனியா 7
ஆஸ்திரியா 8
ஸ்விட்சா்லாந்து 9
ஐஸ்லாந்து 10
வல்லரசு நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை
அமெரிக்கா 43
ரஷ்யா 112
சீனா 160
இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை
காங்கோ குடியரசு 100
உகாண்டா 125
கென்யா 148
நைஜீரியா 163
இந்தியாவின் அண்டை நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை
ஆப்கானிஸ்தான் 81
பூடான் 85
மாலைத்தீவு 113
இலங்கை 132
நேபாளம் 162
பாகிஸ்தான் 176
வங்கதேசம் 177
மியான்மா் 179
ஆய்வின் பல்வேறு பிரிவுகள் இந்தியாவின் தரவரிசை
பல்லுயிா்ப் பெருக்கம் பாதுகாத்தல் 179
உயிரினங்கள் பாதுகாப்பு குறியீடு 175
உயிரினங்கள் வாழ்விட குறியீடு 80
காடுகள் இழப்பு 75
புல்வெளிப் பகுதிகள் இழப்பு 116
சதுப்புநிலப் பகுதிகள் இழப்பு 60
காற்றின் தரம் 179
கடலில் பிளாஸ்டிக் கலப்பு 135
பருவநிலை மாற்றம் 165
கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பு 136
வேளாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு 47