கொவிட் தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (kehaliya rambukvella) தெரிவித்துள்ளார். எத்தகைய தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத பெண்ணொருவர் நாட்டுக்கு வந்தமை அவர், ஒமிக்ரோன் திரிபு உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறித்து கண்டறியப்படவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் நேற்று முன்தினம் (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பில் புதிதாக கண்டறிப்பட்ட வைரஸ் திரிபு குறித்து எதிர்கால நடவடிக்கைள் நேற்று (09) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.