உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரினார் ஐ.நா. ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட் தனது உரையில் இலங்கை அரசானது மனித உரிமைகள் தொடர்பில் அதனைப்பாதுகாப்பது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்பில் தம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் இலங்கையானது மனித உரிமைகள் சார்பில் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பது சம்பந்தமாக தமது மகிழ்ச்சியையும் கூட்டத்தொடரில் தெரிவித்து நின்றார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது மேலும் அவர் கூறுகையில் இலங்கை அரசானது மனித உரிமைகள் சார்பில் தீவிர கவனமெடுத்தது சார்பானது அண்மைக்காலத்தில் அதிகரித்திருப்பதைத்தம்மால் காணக்கூடியதாக இருப்பதாகவும் அரசைப்பொறுத்தவரை அது ஒரு முன்னேற்ற கரமான செயற்பாடே என அவர் தெரிவித்தார் நேற்று இடம் பெற்ற கூட்டத்தொடரிலேயே இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார்.

அண்மைக்காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போர் நிகழ்வின்போதும் அதன்காரணமாக பெருந்தொகையான இழப்புக்களைசந்தித்த மற்றும் தமது உறவுகளைக்காணாமல் போகக்கொடுத்த மக்கள் சார்பாகவும் அவர் குரல் கொடுத்தார்.

அதாவது பாதிப்புக்குள்ளான குடும்பங்களால் முன்வைக்ப்படும் உரிமைசார் கோரிக்கைகளைச்செவி மடுத்து அவர்களது தற்போதைய நிலைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான நியாயமான இழப்பீடுகளையும், வழங்கி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துமாறும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

அத்துடன் காலங்காலமாக நிறைவேற்றப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சில வரைபுகளை மாற்றியமைப்பதினூடாக காலங்காலமாக நியாயமேதுமின்றி சிறைக்கம்பிகளுக்குள் வாடும் கைதிகளுக்கு விடுதலைபெற்றுக்கொடுக்க அரசினால் தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட யோசனைகளை வரவேற்று பாராட்டும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில்  ஏற்பட்டுத்தப்பட்டதவிர்க்கமுடியாததுமான  மனித உரிமை மீறல்கள், மீண்டும்  நாட்டில் ஏற்டாமல் தவிர்ப்பதற்குத் தேவையான ஆழமான சட்டரீதியானதும்,  நிறுவனம் தொடர்பானதும்,  மற்றும் பாதுகாப்புத் துறை சார்பானதுமான, சகல சீர்திருத்தங்களையும் மாற்று வழி முறைகளையும்   எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இலங்கை அரசானது கடந்தகாலங்களில் ஐ நாவால் முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் சம்பந்தமான நிகழ்ச்சி நிரலிலிருந்து அது நழுவல் போக்கைக்கடைப்பிடிப்பதாகவும் இது ஓர் சாதகமான நடைமுறை இல்லை என்பதையும் கூறியதுடன் நல்லிணக்கத்துக்கான நடைமுறைசார் பொறிமுறைகளை அது முன்வைக்கப்பின்நிற்பதாகவும் தனது உரையில் கூறி நின்றார்.

அத்தோடு பிரதானமாக: 2019 ஆம் ஆண்டு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட நாசகாரச்செயற்பாடான  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் , மற்றும் அவர்களுக்காக வழங்கப்பட்ட  நியாயபூர்வமான இழப்பீடு வழங்கல் பற்றியும்,  அதேபோல் ஏற்படுத்தப்பட்ட அந்த நாசகாரத் தாக்குதல்களின் தன்மை,,  அதுசார்பாக பாதுகாப்புப் பிரிவின் பொறுப்புக்கூறல்,  அவர்களால் எடுக்கப்பட்ட சார்பான  நடவடிக்கைகள், என்பனபற்றிய விரிவான, ஓர் தெளிவான நீண்ட  அறிக்கையொன்றை, அவர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாகவும்  கோரிக்கை முன்வைத்தார்.

Spread the love