2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் நடத்தவுள்ளனர்.
இந்தக் குழுநிலை விவாதம் டிசம்பர் 8ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெறும். 2023 வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (22) பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.