2023ஆம் ஆண்டில் கனடா 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. கனடாவின் 2023ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட இலக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கனடா 2023ஆம் ஆண்டில் 465,000 அண்ணளவாக ஐந்து இலட்சம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது எனவும் அதற்கான எதிர்பார்ப்பு எண்ணிக்கை குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம்: 82,880 பேர்
மாகாண நாமினி திட்டங்கள்: 105,500 பேர்
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 28,500 பேர்
கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 78,000 பேர்
நுழைவு திட்டம் | எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை |
எக்ஸ்பிரஸ் | 82,880 பேர் |
மாகாண நாமினி | 105,500 பேர் |
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி | 28,500 பேர் |
கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தை | 78,000 பேர் |
கனடா 2022 நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியது. அதற்கு முந்திய ஆண்டில் 253,000 குடியுரிமை விண்ணப்பங்கள் செயலாக்கப்பட்டதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கனடா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளது.
ஆனால், கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டவர்களும் கனடாவில், சொத்துக்களை வாங்கி குவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.