பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது குறித்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.