22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் பல ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளன.
தற்போது நாடு எதிர்நோக்கும் மிகப் பாரிய பிரச்சனை பொருளாதார நெருக்கடியாகும். 22வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை குறித்த நல்ல செய்தியை தெரிவிக்க முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.