வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெருவோரிடம் மட்டுமே 25 சத வீத மிகை வரி அறவிடப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்தள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் அறவிடப்படும் 25 வீத மேலதிக வரி ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களிடம் அறவிடப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நிதி அமைச்சர் நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.