கமல் நடித்த விக்ரம் படம் பிரமாண்ட ஹிட் ஆகி பல வசூல் சாதனைகளை முறியடித்து இருக்கிறது. அந்த படத்தை தயாரித்ததன் மூலமாக கமலுக்கு மிக்பெரிய லாபமும் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது கமல் தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். KH234 படத்தை மணிரத்னம் தான் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை கமல், ரெட்ஜெயண்ட், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கின்றன.
கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் 35 வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் 1987ல் நாயகன் படத்தில் பணியாற்றி இருந்தனர். தற்போதும் அந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
கமலின் அடுத்த படத்திற்காக இந்த பிரம்மாண்ட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை பலமடங்கு ஏற்படுத்தி இருக்கிறது. “பயணத்தின் அடுத்த கட்டம்” என கமல் இந்த படம் பற்றி குறிப்பிட்டுக்கிறார்.