40 வருட கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில்தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டெஸ்ட் 5 போட்டி நடைபெற்றது.

கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில்தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக் கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான் (2007), இஷாந்த சர்மா (2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Spread the love