திடகாத்திரமாக உடற்தகைமையை பேணாத 4000 பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழு நேற்று கூடியபோது, இது தொடர்பான பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குமாறு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திடகாத்திரமாக உடற்தகைமையைப் பேணாத 4000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் நீடிப்பதாகவும் அவர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி கடமையை செய்வதால், நேர்த்தியாக கடமைகளை செய்யும் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து தேவையான ஆவணங்களை தயாரித்து அமைச்சுக்கு வழங்குமாறு அமைச்சர் டிரான் அலஸ் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த வருடத்தில் அதிகளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால், 16,000 பொலிஸாருக்கான வெற்றிடம் ஏற்படும் எனவும் பொலிஸ்மா அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.