இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையொன்று பாக்கிஸ்தானில் வீழ்ந்து வெடித்ததற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை (9) அன்று பாகிஸ்தானின் கனேவால் மாவட்டத்தின் மியான் சன்னு என்ற பகுதியில் மாலை 6.50 மணியளவில் விழுந்தது. அண்ணல் இந்தச் செய்தி 10ஆம் தேதி இரவுதான் வெளியிடப்பட்டது.
வழமையான இராணுவ உபகரணங்கள் பராமரிப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இதைச் சம்பவம் நடந்துள்ளதாக இந்தியா கூறியது. இந்தச் சம்பவத்திற்கு தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் முகமாக இந்தியத் தூதுவரை அழைத்த பாகிஸ்தான் இது தொடர்பான விளக்கத்தை கேட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றில், கடந்த புதன்கிழமை வழமையான இராணுவ உபகரணங்களது பராமரிப்பின்போது தொழில்நுட்பக் கோளறு காரணமாக ஏவுகணையொன்றாக தவறுதலாக ஏவப்பட்டதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், வெடி பொருட்கள் ஏதுமற்ற ஏவுகணையொன்று பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து 500 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிழக்கு நகரான மியான் சன்னு( Mian Channu) வுக்கு அருகில் வீழ்ந்ததாக குறிப்பிட்டனர்.
இவ்வாறு பாகிஸ்தானில் வீழ்ந்த ஏவுகணை அணுவாயுதத்தைக் காவிச் செல்லக்கூடிய ரஷ்ய, இந்தியக் கூட்டுத்தயாரிப்பில் உருவான தரைத் தாக்குதல் பிரமோஸ் ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தன்னை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.