40,000 மெற்றிக் தொன் டீசல் வந்து சேர்ந்தது – மேலும் இரு கப்பல்கள் வருகின்றன

40,000 மெற்றிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதுடன் டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான பதிவு முடியும் வரை புதிய எரிபொருள் இருப்புக்களின் விநியோகம் ஆரம்பிக்கப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு டீசல் கப்பல் நேற்று முன்தினம் காலை இலங்கையை வந்தடைந்ததுடன், அவற்றின் இறக்குமதி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்று இன்று திங்கட்கிழமை அல்லது நாளை இலங்கையை வந்தடைய உள்ளது. அனைத்து எரிபொருள் ஏற்றுமதிக்கான கொடுப்பனவுகளும் நிறை வடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை 14 மற்றும் 17ஆம் திகதிக்கு இடையில் இரண்டு எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தது. ஜூலை 15 மற்றும் 17 ஆம் திகதிக்கு இடையில் லங்கா ஐ.ஓ.சிக்கான டீசல் கப்பலும் 17 மற்றும் 19 ஆம் திகதிக்கு இடையில் பெற்றோல் கப்பலும் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Spread the love