சீனாவிலிருந்து 500 மில்லியன் நிதியுதவியின் கீழ், முதல் தொகுதி மருந்து பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன. இலங்கைக்கு உலகின் பல நாடுகளும் உதவிகளை வழங்கி வரும் நிலையில், தற்போது சீனாவின் நன்கொடையின் கீழ் வழங்கப்படும் மருந்துகளின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவிக்கையில், 10 மில்லியன் சீன பணப் பெறுமதியான 512,640 உயிர்காக்கும் எனோக் ஸாபரின் சோடியம் ஊசி மருந்துகள் இலங்கைக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. “உயிர்காக்கும் எனோக்ஸாபரின் சோடியம் ஊசியின் 512,640 ஊசிகளில் 256,320 சிரிஞ்ச்கள் நாளை நள்ளிரவில் முதல் சரக்கு கப்பலில் வந்து சேரும்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இலங்கைக்கான சீனாவின் 500 மில்லியன் சீனப் பண பெறுமதியிலான மானியத்தின் ஒரு பகுதியே இந்த மருந்துப் பொருட்களின் முதல் தொகுதி என சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து மருந்துகள் இரண்டு சரக்கு கப்பல்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.