6 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள லங்கா சதொச நிறுவனம்

லங்கா சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (26) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

நுகர்வோருக்கு சலுகை வழங்கும் வகையில் சதொச நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக செத்தல் மிளகாய், சிவப்பு மற்றும் வெள்ளைப் பச்சையரிசி, வெள்ளை நாட்டரிசி, பருப்பு, கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ஆயிரத்து 700 ரூபா. சிவப்பு பச்சை அரிசி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 179 ரூபா. வெள்ளைப் பச்சை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் புதிய விலை 169 ரூபாவாகும். வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 184 ரூபா. பருப்பு 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 365 ரூபா. கீரி சம்பா 4 ரூபாவாலும்  குறைக்கப்பட்டுள்ளன. இதன் புதிய விலை 235 ரூபா.

Spread the love