இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் காண முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுகளே. உடல் எடையைக் குறைக்கும் போது உணவுகளில் சில கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பலருக்கும் இது கடினமான காரியமாகவே இருக்கின்றது.
எடையைக் குறைக்க சிரமம், உடல் எடை எவ்வளவு வேகமாக அதிகரிக்கின்றதோ, அவ்வளவு வேகமாக நாம் உடல் எடையினை குறைத்துவிட முடியாது. ஏனெனில் சரியான உணவு கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் உடல் எடை குறைப்புக்கு முக்கியமாகும். நமது உடலுக்குப் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் தேவையான ஊட்டச்சத்துக்களாக உள்ளன. இவற்றை நாம் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் வழியே பெறமுடியும். ஆனால் நாம் சரியான உணவைத் திட்டமிட்டு உண்ணாமல் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் தேவையற்ற கொழுப்பாக சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கின்றது.
காலை உணவு
உடல் எடையைக் குறைப்பதற்கு காலை நேரங்களில் அவல், பாசிப்பயறு, காய்கறி டாலியா, சாலட், முட்டை, வாழைப்பழங்கள் இவற்றினை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு வேண்டாம் எனில் வாரத்தின் ஏழு நாட்களுக்கு 3 வேளை என்னென்ன சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
திங்கட்கிழமை
காலை உணவு: இரண்டு இட்லி, புதினா சட்னி, சாப்பார் அல்லது பன்னீர் சாண்ட்விச் சாப்பிடலாம்.
மதிய உணவு: ஏதாவது ஒரு தானியம் மற்றும் காய்கறியுடன் ஒரு தானிய ரொட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இரவு உணவு: காய்கறி கலவை அல்லது கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பு
செவ்வாய் கிழமை:
காலை உணவு: காய்கறி கலவையுடன் கடலைப் பருப்பில் செய்த அப்பம், இதனுடன் ஒரு க்ளாஸ் பால் அல்லது முட்டை
மதிய உணவு: பழுப்பு அரிசி சாதம், கொண்டை கடலை குருமா
இரவு உணவு: முளைக்கட்டிய பயிறு சாலட்டோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக்கொள்ளலாம்.
புதன் கிழமை
காலை உணவு: ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை சாறு மற்றும் காய்கறி சாம்பாருடன் ஊத்தாப்பம்.
மதிய உணவு: எதாவது ஒரு அசைவம் , காய்கறி கலவை மற்றும் ரொட்டி.
இரவு உணவு: பழுப்பு அரிசி சாதம், காய்கறி குழம்பு, பன்னீர், கோழி மற்றும் தயிர்.
வியாழக்கிழமை:
காலை உணவு: நறுக்கிய பழங்கள் மற்றும் சூரியகாந்தி விதைகள் அல்லது காய்கறி மற்றும் தயிர்.
மதிய உணவு: காய்கறி கூட்டு மற்றும் குருமா அல்லது தானிய ரொட்டியுடன் அசைவ குருமா மற்றும் பழுப்பு அரிசி சாதம் சாப்பிடலாம்.
இரவு உணவு: காய்கறி கலவை அல்லது கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பை சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை:
காலை உணவு: தாளித்த காய்கறிகள் மற்றும் ஒரு க்ளாஸ் பால் அல்லது 3 முதல் 4 பருப்பு தானிய உருண்டைகள் மற்றும் சாம்பார்.
மதிய உணவு: பழுப்பு அரிசி சாதம் மற்றும் காய்கறி சாம்பார்.
இரவு உணவு: உருளைக்கிழங்குடன் கோழிக்கறி மற்றும் காய்கறி கலவைகள் அல்லது கோழிக்கறி மற்றும் 2 ரொட்டிகள்.
சனிக்கிழமை
காலை உணவு: அவகாடோ மற்றும் நறுக்கிய பப்பாளி அல்லது பருப்பு கலந்த காய்கறி கூட்டுடன் கோதுமை பரோட்டா.
மதிய உணவு: இறைச்சி மற்றும் பழங்கள் அல்லது காய்கறி சாலட்
இரவு உணவு: முளைக்கட்டிய பயிறு சாலட்டோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை
காலை உணவு: ஒரு மாம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால் அல்லது பழங்கள் கொண்டு செய்யப்பட்ட சாலட்
மதிய உணவு: முழு தானிய ரொட்டியுடன் காய்கறி சூப் அல்லது ஒரு கிண்ணம் தினை மற்றும் தானிய கிச்சடி.
இரவு உணவு: மசாலா சேர்க்கப்பட்ட காய்கறி அல்லது அசைவ உணவு
உடற்பயிற்சி
Plank Exercise என்பது தொப்பையைக் குறைக்கும் பயிற்சியாக கருதப்படுகின்றது. இந்த உடற்பயிற்சியினை இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களின் கட்டை விரல்களை தரையில் ஊன்றி உடலை மேலே உயர்த்தி இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் 10 விநாடிகள் நீடித்து இருக்க வேண்டும். ஒருநாளைக்கு 4-5 முறை செய்யதால், ஒரு மாதத்தில் மிகப்பெரும் வித்தியாசத்தினை நீங்கள் காணலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள்
பர்கர்
பீட்ஸா
சீஸ்
இனிப்பு நிறைந்த உணவுகள்