உலகின் முன்னணி இணைய உலாவியான கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது லோகோவை மாற்றியுள்ளது. இதனை GOOGLE CHORME வடிவமைப்பாளரான Elvin H. டுவிட்டரில் தெரிவித்தார். தன்னுடைய பதிவில் கூகுள் குரோமின் புதிய வடிவமைப்பையும் அவர் பதிவிட்டுள்ளார்.
புதிய LOGO மாற்றம் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், உங்களில் சிலர் இன்று குரோமின் ஒரு புதிய ICON கவனித்திருக்கலாம் 8 ஆண்டுகளில் முதல் முறையாக, குரோமின் பிராண்ட் ஐகான்களைப் புதுப்பிக்கிறோம். புதிய ICON உங்கள் சாதனங்களில் விரைவில் தோன்றுவதற்கு ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார். வர்ண விகிதாச்சாரங்கள் வேறுபடுத்தப்பட்டு, முன்பிருந்ததை விடவும், பிரகாசமாக இருக்கும் வகையில், குறித்த லோகோ வடிவமைக்கப்பட்டது. நடுவில் நீலநிறப்பந்து கொடுக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகியவற்றில் இந்த புதிய லோகோ விரைவில் தோன்றுமென அறிவிக்கப்பட்டது. ஓ.எஸ். சார்ந்த தனிப்பயனாக்கங்களை நாங்கள் உருவாக்கினோம். குரோம் ஐகான் எளிதில் அடையாளம் காணப்படவேண்டும். விண்டோஸ் 10 மற்றும் 11 பதிப்பில் கூகுள் குரோம் ஐகான் தோற்றம் இனி வித்தியாசமாகவும், தனியாகவும் தெரியுமெனவும், ஹூ கூறினார். குரோம் கேனரி பயன்படுத்துப்வர்களுக்கு இந்த புதிய லோகோ உடனடியாக தெரிவதற்கு ஆரம்பிக்கும் எனக் கூறியுள்ள ஹூ, கூகுள் குரோமின் புதிய ஐகான் நிச்சயம் அனைவரையும் கவரும் எனக் கூறியுள்ளார். கூகுள் குரோம் கேனரி 100வது பதிப்பினைப்பெற இருப்பதை கொண்டாடும் வகையில், குரோம் ஐகான் மாற்றப்பட்டுள்ளது. லோகோவைப் பொறுத்தவரை சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் மாற்றப்படவில்லை. அவற்றின் பிரகாசத்தன்மை அதிகப்படுத்தப்பட்டது.